Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம்: வானுாரில் அடிக்கல் நாட்டு விழா 

அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம்: வானுாரில் அடிக்கல் நாட்டு விழா 

அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம்: வானுாரில் அடிக்கல் நாட்டு விழா 

அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம்: வானுாரில் அடிக்கல் நாட்டு விழா 

ADDED : செப் 05, 2025 09:52 PM


Google News
Latest Tamil News
வானுார்:

வானுார் அரசு மருத்துவமனைக்கு 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

விழாவின் சிறப்பு விருந்தினர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் உஷா முரளி, தாசில்தார் வித்யாதரன், வானுார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கமலா, வீணா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜவேலு முன்னிலை வகித்தனர்.

இந்த கட்டடத்தில், முன்பதிவு, அவசர சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, மகப்பேறு அறை, காத்திருப்பு அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் அரவிந்தன், ஒன்றிய செயலாளர்கள் மைதிலி ராஜேந்திரன், முரளி, ராஜூ, புஷ்பராஜ், பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ., ஜானகிராமன், ஒன்றிய கவுன்சிலர் சசிக்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் அன்புமணி, கவுதம், வானுார் ஊராட்சி தலைவர் சுப்ரமணியன்.

மாவட்ட பிரதிநிதிகள் நெடுஞ்செழியன், பாலு (எ) நாதமணி, மத்திய ஒன்றிய துணை செயலாளர் எழிலரசி முத்தமிழ், அச்சரம்பட்டு வினோத், இளைஞர் அணி அமைப்பாளர் ராஜவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us