ADDED : மே 11, 2025 01:30 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழக அரசு துாய்மை பணியாளர்கள் நலவாரியம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பொது மருத்துவ முகாம் நடந்தது.
விழுப்புரம் மகாராஜபுரம் பாலாஜி அரங்கில் நடந்த முகாமை, லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையர் வசந்தா, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், துாய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர் கண்ணன், இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் டாக்டர் கோவிந்தராஜ், சிவக்குமார், ஜோதி, சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர்.
கீழ்ப்பெரும்பாக்கம் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் பங்கேற்று, துாய்மை பணியாளர்கள், பொது மக்களுக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர்.