/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் புறநகர் பகுதிகளில் குப்பை அகற்றும் பணி தீவிரம்விழுப்புரம் புறநகர் பகுதிகளில் குப்பை அகற்றும் பணி தீவிரம்
விழுப்புரம் புறநகர் பகுதிகளில் குப்பை அகற்றும் பணி தீவிரம்
விழுப்புரம் புறநகர் பகுதிகளில் குப்பை அகற்றும் பணி தீவிரம்
விழுப்புரம் புறநகர் பகுதிகளில் குப்பை அகற்றும் பணி தீவிரம்
ADDED : ஜன 04, 2024 03:47 AM

விழுப்புரம்: தமிழக சட்டசபை 2023--2024ம் ஆண்டிற்கான அரசு மதிப்பீட்டுக்குழுவினர், விழுப்புரம் மாவட்டத்தில், இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர். குழுவின் தலைவர் அன்பழகன் தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதனையொட்டி, விழுப்புரம் நகரில் முக்கிய வீதிகள், புறநகர் பகுதிகளில் சாலையோரம் குப்பைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரு புறமும் இருந்த குப்பைகள் அகற்றும் பணி நேற்று காலை நடைபெற்றது.
இப்பணிகளை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சக்திவேல், துப்புரவு பணி மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் மேற்பார்வையிட்டனர்.