ADDED : செப் 10, 2025 01:46 AM

விழுப்புரம் : விழுப்புரம் புதுச்சேரி சாலையிலுள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணி முதல் காலை 7:00 வரை பால், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் மலர்களால் அர்ச்சனை மற்றும் ஆராதனை நடந்தது.
தொடர்ந்து காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து, 11:30 மணியவில் அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
ஏற்பாடுகளை உபயதாரர்கள் ஜெயபாலன், கவிதா, டாக்டர் சரவணன், டாக்டர் பிரித்திசக்தி பேபி லக்ஷனா செய்திருந்தனர்.
அப்போது, பழனிசாமி, சீத்தாராமன், பட்டுராஜா, இன்பசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.