/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரம் நகராட்சியில் கொடி கம்பங்கள் அகற்றம் விழுப்புரம் நகராட்சியில் கொடி கம்பங்கள் அகற்றம்
விழுப்புரம் நகராட்சியில் கொடி கம்பங்கள் அகற்றம்
விழுப்புரம் நகராட்சியில் கொடி கம்பங்கள் அகற்றம்
விழுப்புரம் நகராட்சியில் கொடி கம்பங்கள் அகற்றம்
ADDED : மே 16, 2025 11:16 PM
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் பொது இடங்களில் வைக்கப்பட்டு இருந்த கொடி கம்பங்கள் அகற்றும் பணி நேற்று நடந்தது.
நகராட்சிகள், மாநகராட்சிகள், பேரூராட்சிகள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி, விழுப்புரம் நகராட்சியில் பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை நகரமைப்பு அலுவலர் தாமோதரன், ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.


