ADDED : செப் 12, 2025 04:00 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் அண்ணா பல்கலை., பொறியியல் கல்லுாரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை வகித்து, கண் தானத்தின் அவசியம் குறித்து விளக்கினார். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி கண் டாக்டர்கள் உமாராணி, ரகுநாத், யாமினி ஆகியோர், கண் தானம் குறித்தும், அதன் முக்கியத்துவம், அதனால் மக்கள் பயன்பெறும் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். கல்லுாரி செஞ்சுருள் சங்க அலுவலர் பழனி ஒருங்கிணைத்தார்.