/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மேல்சித்தாமூர் மார்க்கெட் கமிட்டியில் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வுமேல்சித்தாமூர் மார்க்கெட் கமிட்டியில் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
மேல்சித்தாமூர் மார்க்கெட் கமிட்டியில் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
மேல்சித்தாமூர் மார்க்கெட் கமிட்டியில் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
மேல்சித்தாமூர் மார்க்கெட் கமிட்டியில் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
ADDED : ஜன 06, 2024 05:32 AM

செஞ்சி மேல்சித்தாமூரில் புதிதாக கட்டியுள்ள மார்க்கெட் கமிட்டியை ஆய்வு செய்த சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததால் கடும் அதிருப்தி அடைந்தனர்.
தமிழக சட்ட மன்ற மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் தலைமையில், உறுப்பினர்கள் சேவூர் ராமச்சந்திரன், பரந்தாமன், சிவக்குமார், சிந்தனை செல்வன், சந்திரன் ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ள அரசு திட்டப்பணிகள், பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.
இதன் ஒரு பகுதியாக வல்லம் ஒன்றியம் மேல்சித்தாமூரில் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா செய்யாமல் உள்ள மார்க்கெட் கமிட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். அமைச்சர் மஸ்தான், சட்டப்பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன், கூடுதல் செயலாளர் சுப்பிரமணியன், கலெக்டர் பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.
மார்க்கெட் கமிட்டியை ஆய்வு செய்த குழுவினர் சுற்று சுவர் இல்லாமலும், விவசாயிகளின் வாகனங்கள் வந்து செல்ல வழி இல்லாமலும் இருந்ததை கண்டு கடும் அதிருப்தி அடைந்தனர். வேளாண்மை மற்றும் வணிகத்துறை அதிகாரிகளிடம் தங்களின் அதிருப்தியை தெரிவித்தனர். மார்க்கெட் கமிட்டி திறப்பதற்கு முன்பு அடிப்படை வசதிகளை முழுமையாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் சத்தியமூர்த்தி, முன்னாள் எல்.எல்.ஏ., சேதுநாதன், மாவட்ட விற்பனை குழு செயலாளர் ரவி, உதவி பொறியாளர் சரவணன், ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.