ADDED : ஜூன் 07, 2024 06:37 AM
வானுார், : விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க வானுார் ஒன்றியம் சார்பில், சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கிளியனுார் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் அருள் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் துணிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல், துணிப்பை ஏற்பாடு செய்து பிளாஸ்டிக் பை தவிர்க்க வேண்டிய அவசியம் குறித்து பேசினார். நிகழ்ச்சியை ஒன்றிய செயலாளர் சுமதி ஒருங்கிணைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி தலைவர் நாகம்மாள், துணைத் தலைவர் தெய்வ ஜோதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, டேனியல் கல்வியல் கல்லுாரி முதல்வர் மகாலட்சுமி, செயற்குழு உறுப்பினர் லட்சுமி ரேகா ஆகியோர், மரக்கன்றுகளை நட்டு, பொது மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில், உப்புவேலுார் கால்நடை மருத்துவர் சுந்தரபாண்டியன், கிளியனுார் முக்கியஸ்தர்கள் அர்ஜூனன், ரவி விவேகானந்தன், ராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் கமலேஷ், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.