ADDED : ஜூன் 07, 2024 06:37 AM
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே மதுபோதையில் நண்பரை தாக்கிய இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, ஒருவரை கைது செய்தனர்.ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வ ராஜ் மகன் அருள்தாஸ், 42; இவரும், அதே கிரா மத்தை சேர்ந்த நண்பர்களான அலெக்ஸ், 32; மைக்கேல் ஆகிய 3 பேரும், கடந்த மே 28ம் தேதி பிரிவிடையாம்பட்டு ஏரிக்கரையில் மது அருந்தினர்.போதை அதிகமானதால் அருள்தாஸ் மற்றும் அலெக்ஸ், ராஜி ஆகியோர் இடையே பிரச்னை ஏற்பட்டது.ஆத்திரமடைந்த அலெக்ஸ், ராஜி ஆகியோர் அருள்தாசை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், இருவர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து, அலெக்சை கைது செய்தனர்.