ADDED : ஜன 05, 2024 12:19 AM
செஞ்சி : செஞ்சியில் த.மு.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாம்பரம் மாநகராட்சி உறுப்பினர், ம.ம.க., மாநில துணைப் பொதுச் செயலாளர் யாக்கூப்பை மாநகராட்சி கமிஷனர் அழகு மீனா, அவமரியாதை செய்ததை கண்டித்தும், அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ம.ம.க., - வி.சி., கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தினர்.
இதனை கண்டித்து செஞ்சி கூட்ரோட்டில் த.மு.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் சையத் உஸ்மான் தலைமை தாங்கினார்.
ம.ம.க., மாவட்ட செயலாளர் அர்ஷத், நகர தலைவர் அலி ஜான், மாவட்ட துணைச் செயலாளர்கள் முனுசாமி, முபாரக் மற்றும் த.மு.மு.க.., - ம.ம.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.