ADDED : ஜூன் 15, 2025 06:59 AM

வானுார் : வானுார் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் பெரும்பாக்கத்தில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மத்திய மாட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., வரும் சட்டசபை தேர்தலில் பணியாற்ற வேண்டிய கடமைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக பெரும்பாக்கத்தில் கட்சி அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, ஒன்றிய சேர்மன்கள் உஷா முரளி, வாசன், அவைத்தலைவர் குப்பன், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ, வானுார் ஒன்றிய முன்னாள் சேர்மன் சிவா, மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், மாவட்ட கவுன்சிலர்கள் அன்புமணி, கவுதம், ஒன்றிய செயலாளர் ராஜூ, முன்னாள் ஊராட்சி தலைவர் ஜானகிராமன், துணைச் செயலாளர்கள் வேலாயுதம், விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.