ADDED : ஜூலை 03, 2025 12:45 AM

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே மாணவர்களுக்கு மஞ்சள் பைகள் வழங்கப்பட்டன.
அவலுார்பேட்டை அடுத்த வடுகப்பூண்டி கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு மஞ்சள் பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வருவாய் ஆய்வாளர் சசிகலா வரவேற்றார். தனி தாசில்தார் புஷ்பாவதி மாணவர்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கினார்.
இதில் வருவாய் ஆய்வாளர்கள் பரமசிவம், குமார், வி.ஏ.ஓ., காளிதாஸ், பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.