ADDED : ஜூலை 03, 2025 12:45 AM
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா வழிபாடு நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு, மூலவர் ராமநாதீஸ்வர், ஞானாம்பிகை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் நடராஜர் சுவாமிகள் நடன நிகழ்ச்சியும், சுவாமிகள் வீதியுலாவும் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி, பொதுமக்கள் மேற்கொண்டனர்.