/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி; மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி; மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி; மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி; மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி; மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
ADDED : ஜன 05, 2024 12:22 AM

விக்கிரவாண்டி : புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் சார்பில் 'பதில் சொல்; அமெரிக்கா செல்' வினாடி வினா போட்டி, கோலியனுார் அடுத்த எடப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த போட்டிக்கு, தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க கல்வி அறக்கட்டளை செயலாளர், சரவணகுமார், செயலாளர் அன்பழகன், பொருளாளர் சுரேஷ்குமரன் முன்னிலை வகித்தனர். உதவி ஆசிரியர் சம்பத் வரவேற்றார். போட்டியில் 100 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
அதில் 16 பேரை தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 3 சுற்றுகளாக போட்டி நடந்தது.
இறுதியாக மாணவர்கள் ஹரிஷ்குமார், ஹரிஹரன் குழு முதலிடத்தையும், மாணவிகள் சாருமதி, மதுமதி குழு இரண்டாமிடமும் பிடித்தனர்.
போட்டியில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் கன்யா ரமேஷ் தலைமையில் கல்வி அறக்கட்டளைத் தலைவர் முத்து சரவணன் பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கிப்பேசினார்.
போட்டியில் பங்கேற்ற 100 மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
இதேபோன்று, மதுரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த போட்டிக்கு, தலைமை ஆசிரியர் மரிய ஜோசப் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க கல்வி அறக்கட்டளை செயலாளர், சரவணகுமார், செயலாளர் அன்பழகன், பொருளாளர் சுரேஷ்குமரன் முன்னிலை வகித்தனர். உதவி ஆசிரியர் காவேரி வரவேற்றார்.
போட்டியில் 100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில் 16 பேரை தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 3 சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடந்தது. இறுதியாக மாணவிகள் ரித்திகா, லட்சுமி குழு முதலிடமும்; மாணவர்கள் கிரிதரன், வேதகிரி குழு இரண்டாமிடத்தையும் வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் கன்யா ரமேஷ் தலைமையில் கல்வி அறக்கட்டளைத் தலைவர் முத்து சரவணன் பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். போட்டியில் பங்கேற்ற 100 மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிக்கு, தலைமை ஆசிரியர் சுமித்ரா தேவி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் கண்ணன், லதா, ஜெயக்கொடி, கணேசன் முன்னிலை வகித்தனர். உதவி ஆசிரியர் ராணி வரவேற்றார்.
போட்டியில் 16 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 3 சுற்றுகளாக போட்டி நடந்தது.
இறுதியில், மாணவிகள் பூஜா, இளமதி குழு முதலிடத்தையும், ஷிவானி, சுப்ரியா குழு இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் குழு பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கி பேசினார்.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.