/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/காணை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணி: கலெக்டர் ஆய்வுகாணை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணி: கலெக்டர் ஆய்வு
காணை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணி: கலெக்டர் ஆய்வு
காணை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணி: கலெக்டர் ஆய்வு
காணை ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணி: கலெக்டர் ஆய்வு
ADDED : பிப் 11, 2024 02:53 AM

விழுப்புரம்: காணை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
காணை ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவாலை, ஏழுசெம்பொன் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேற்று மாலை கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காணை அடுத்த சிறுவாலை ஊராட்சியில் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் 6.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளத்தை பார்வையிட்டு, அதன் பரப்பு, கொள்ளளவு குறித்து கேட்டறிந்தது குளத்தைச் சுற்றி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அதே பகுதியில் 2.63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
பின், சிறுவாலை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டார். 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக வெட்டப்பட்டுள்ள கிணற்றை பார்வையிட்டு பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து பயன்பெறும் வகையில் முறையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், சீனிவாசன் உட்பட பலர் உடனிருந்தனர்.