ADDED : ஜன 03, 2024 12:05 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களின் பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில துணை பொதுச்செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் டேவிட்குமார், விவசாய அணி செயலாளர் அருண்பாண்டியன் கண்டன உரையாற்றினர். இயக்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினர் வழங்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களுக்கான அடிப்படை பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்த பணிகளுக்கு லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.