Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: 'மாஜி'க்கு குற்றப்பத்திரிகை வழங்கல்

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: 'மாஜி'க்கு குற்றப்பத்திரிகை வழங்கல்

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: 'மாஜி'க்கு குற்றப்பத்திரிகை வழங்கல்

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: 'மாஜி'க்கு குற்றப்பத்திரிகை வழங்கல்

ADDED : ஜன 05, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம் : முதல்வர் குறித்த அவதுாறு வழக்குகளில், விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரான அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகத்திற்கு குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கடந்த மார்ச் 7ம் தேதி நாட்டார்மங்கலத்திலும், 10ம் தேதி ஆரோவில்லிலும், மே 1ல் கோட்டக்குப்பத்திலும், ஜூன் 21ல் விழுப்புரத்திலும் பொதுக் கூட்டங்கள் நடந்தன.

இக்கூட்டங்களில் முன்னாள் அமைச்சர் சண்முகம், தமிழக அரசையும்,முதல்வர் ஸ்டாலினையும் அவதுாறாக பேசியதாக, அரசு வழக்கறிஞர் சுப்ரமணியம், விழுப்புரம்மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நான்கு வழக்குகளும் நேற்று விசாரணைக்கு வந்தன.

விசாரணைக்கு ஆஜரான சண்முகத்திற்கு, ஏற்கனவே மூன்று வழக்குகளில் குற்றப்பத்திரிகை வழங்கிய நிலையில், நேற்று விழுப்புரம் வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ''நாட்டார்மங்கலம், ஆரோவில் வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் தீர்ப்பு வரும் வரை, வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்'' என கோரினர்.

அதனையேற்று வழக்கின் விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

புதிய வழக்குகள்


விழுப்புரத்தில் கடந்த பிப்ரவரி 28 மற்றும் ஜூலை 28ம் தேதிகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் முதல்வர் குறித்து அவதுாறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சண்முகம் மீதும், செப்டம்பர் 18ம் தேதி திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதுாறாக பேசியதாக முன்னாள் அமைச்சர், சக்கரபாணி எம்.எல்.ஏ., மீது விழுப்புரம் மாஜிஸ்திரேட் எண்.1 கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சர் சண்முகம், சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆஜராகினர்.

இவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஜூலை 25ம் தேதிக்கான வழக்கில் தடை கோரி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது என வாதிட்டனர்.

அதையடுத்து, இந்த 3 வழக்குகளின் விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து மாஜிஸ்திரேட் ராதிகா உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us