ADDED : ஜன 29, 2024 06:16 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அருகே கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மனைவி ஹரிணி என்கிற சுஜாதா, 21; இவர், தனது கணவரோடு சென்னை, ஆவடியில் வசிக்கிறார். நேற்று முன்தினம் ஹரிணியை, அவர் தாய் அங்கம்மாள் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு பஸ்சில் ஏற்றி விட்டுள்ளார். வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அங்கம்மாள் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.