/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கலெக்டரிடம் வாழ்த்துகேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கலெக்டரிடம் வாழ்த்து
கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கலெக்டரிடம் வாழ்த்து
கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கலெக்டரிடம் வாழ்த்து
கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கலெக்டரிடம் வாழ்த்து
ADDED : ஜன 28, 2024 07:18 AM

விழுப்புரம், : கேலோ இந்தியா மல்லர் கம்பம் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற விழுப்புரம் வீரர்கள், கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.
மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சகத்தின் கேலோ இந்தியா அமைப்பின் 6வது 'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி 2023' கடந்த 19ம் தேதி துவங்கியது.
திருச்சியில் கடந்த 21ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்த மல்லர் கம்பம் போட்டியில் 22 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், விழுப்புரம் அணியை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயக்குமாரி அணி மேலாளராகவும், ஆண்கள் அணி பயிற்சியாளர் நடராஜன், பெண்கள் அணி பயிற்றுநர் ஆதித்தன் ஆகியோர் அணியை வழிநடத்திச் சென்றனர்.
போட்டியில், மதிவனி, பூமிகா, சங்கீதா, பாலாஜி ஆகியோர் இடம் பெற்ற தமிழ்நாடு மல்லர் கம்பம் விளையாட்டு வீரர் அணி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குழு விளையாட்டுப் போட்டியில் வெள்ளி ப்பதக்கம் வென்றது. மேலும், தனிப்பிரிவில் பூமிகா, வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பதக்கம் வென்ற மல்லர் கம்பம் விளையாட்டு வீரர்கள் கலெக்டர் பழனியை சந்தித்து பதக்கம், கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
நிகழ்ச்சியின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ், ஆர்.டி.ஓ., காஜா ஷாகுல் அமீது, நகராட்சி கமிஷனர் ரமேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி, தாசில்தார் கிருஷ்ணதாஸ் உடனிருந்தனர்.