ADDED : செப் 17, 2025 12:28 AM

விழுப்புரம்; விழுப்புரம் அருகே அரசூரில் உள்ள வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் கணினி பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் இந்தாண்டிற்கான துவக்க விழா நடைபெற்றது.
தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாணவி சந்தியா வரவேற்றார். முதல்வர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
சென்னை, சி.டி.எஸ்., முதன்மை மேலாளர் சந்திரசேகரன் சேஷாத்ரி, சைபர் செக்யூரிட்டி கன்சல்டன்சி ஷாம்பிரகாஷ் ஆகியோர் பேசினர்.
இவர்கள், கணினி அமைப்புகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்யும் செயல்முறைகள் பற்றி விளக்கம் அளித்தனர்.
இதில், துணை முதல்வர், கணிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாணவர் அரிகரன் நன்றி கூறினார்.