ADDED : மே 20, 2025 11:45 PM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புளிய மரம் வெட்டப்பட்டது குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.
விழுப்புரம் அருகே கோலியனூர் ஒன்றியம் நரையூர் கிராமத்தில், புதிய ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகே, பொது இடத்தில் இருந்த 50 ஆண்டுகால பழமை வாய்ந்த பெரிய புளிய மரத்தை, அங்குள்ள சிலர் அனுமதியின்றி நேற்று முன்தினம் வெட்டினர்.
இது குறித்து, அந்த கிராமத்தினர் கேட்டபோது, மரத்தை அங்கேயே வீசிவிட்டு சென்றனர்.
இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த பா.ஜ., பிரமுகர் திருமால் உள்ளிட்டோர், கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து, விழுப்புரம் வருவாய்த்துறையினர் நேரில் சென்று விசாரித்து, அபராதம் விதித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.