/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரத்தில் புத்தகத் திருவிழா அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனைவிழுப்புரத்தில் புத்தகத் திருவிழா அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
விழுப்புரத்தில் புத்தகத் திருவிழா அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
விழுப்புரத்தில் புத்தகத் திருவிழா அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
விழுப்புரத்தில் புத்தகத் திருவிழா அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை
ADDED : ஜன 07, 2024 05:14 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், அரசு சார்பில் புத்தகத் திருவிழா நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டிற்கான புத்தகத் திருவிழா நடத்துவது தொடர்பாக, நடைபெறும் இடம் மற்றும் நடைபெறவுள்ள நாட்கள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புத்தக அரங்குகள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் குறித்து திட்டமிடுதல். உள்ளூர் பிரமுகர்கள் எழுதிய புத்தகங்கள் வெளியிடுதல். சிறப்பு பேச்சாளர்களை அழைத்து சொற்பொழிவு நடத்துவது.
துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள அரசின் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகள் அமைப்பது போன்ற முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ், ஆர்.டி.ஓ., காஜாஷாகுல் ஹமீது, கூடுதல் எஸ்.பி., ஸ்ரீதர், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் யசோதாதேவி உட்பட முக்கிய துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.