/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் முதன்மைச் செயலர் அறிவுறுத்தல்மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் முதன்மைச் செயலர் அறிவுறுத்தல்
மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் முதன்மைச் செயலர் அறிவுறுத்தல்
மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் முதன்மைச் செயலர் அறிவுறுத்தல்
மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் முதன்மைச் செயலர் அறிவுறுத்தல்
ADDED : ஜன 13, 2024 03:33 AM
விழுப்புரம் : 'மக்களுடன் முதல்வர் திட்ட மனுக்கள் மீது, உடனடி தீர்வு காண வேண்டும்' என அரசு முதன்மை செயலர் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்களிடம் பெறும் மனுக்கள் நிலவரம் குறித்து, அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, அரசு முதன்மைச் செயலர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர்சஹாய் மீனா தலைமை தாங்கினார்.
அப்போது, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில், துறை வாரியாக கிடைக்கப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கை விபரம், தீர்வு காணப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை, நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது, துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மனுக்களின் நிலை குறித்து மனுதாரருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
தீர்வு காண்பதில் சிக்கல் இருந்தால், அதற்குரிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷி நிகாம், ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அரிதாஸ், கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் இளஞ்செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உட்பட அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.