/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரத்தில் 78 போலீசாருக்கு முதல்வரின் காவலர் பதக்கம்விழுப்புரத்தில் 78 போலீசாருக்கு முதல்வரின் காவலர் பதக்கம்
விழுப்புரத்தில் 78 போலீசாருக்கு முதல்வரின் காவலர் பதக்கம்
விழுப்புரத்தில் 78 போலீசாருக்கு முதல்வரின் காவலர் பதக்கம்
விழுப்புரத்தில் 78 போலீசாருக்கு முதல்வரின் காவலர் பதக்கம்
ADDED : ஜன 28, 2024 07:25 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில் நடந்த குடியரசு தின விழாவில் 78 போலீசாருக்கு, தமிழக முதல்வரின் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக மைதானத்தில் நேற்று குடியரசு தின விழா நடந்தது. கலெக்டர் பழனி தேசிய கொடி ஏற்றினார்.
அப்போது, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 2 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 78 போலீசாருக்கு, தமிழக முதல்வரின் காவலர் பதக்கத்தை கலெக்டர் வழங்கினார்.
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பாண்டுரங்கன், சரவணன், ஏட்டுகள் தவமணி, குகநாதன், பாபு, சிவமணி, ஜெயந்தி, சுந்தர்ராஜ், பிரபாகர், கண்ணன், அன்வர்பாஷா, சின்னதுரை, இளங்கோவன், சீனுவாசன், மஞ்சநாதன், கலை வாணன், விஜயகாந்த், சீதாராமன், கணேசன், சதீஷ்குமார், பிரிதிவிராஜ், இந்திரஜித், பிரபு, செந்தில், கண்ணன், முத்துகிருஷ்ணன், செல்வமுருகன், சுப்ரமணியன், நாகராஜன், தீபன்குமார், கருணாகரன், முனியப்பன், செந்தில்குமார், தீனதயாளன், ஆனந்தன், குமரன், ராஜசேகரன், மாரிசாமி, ரமேஷ், சுரேஷ், மஞ்சுளா, உஷா, பரமேஷ்வரி, வேளாங்கண்ணி, மல்லிகா உள்ளிட்ட 78 போலீசாருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.