/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முதல்வர் கோப்பை பேட்மின்டன் துவக்கம் முதல்வர் கோப்பை பேட்மின்டன் துவக்கம்
முதல்வர் கோப்பை பேட்மின்டன் துவக்கம்
முதல்வர் கோப்பை பேட்மின்டன் துவக்கம்
முதல்வர் கோப்பை பேட்மின்டன் துவக்கம்
ADDED : செப் 04, 2025 04:21 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் முதல்வர் கோப்பைக்கான பேட்மின்டன் போட்டிகள் தொடங்கியது.
விளையாட்டு துறை சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது.விழுப்புரம் பெருந்திட்ட வளாக அரசு உள்விளையாட்டரங்க வளாகத்தில் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் வரவேற்றார்.
ஏ.டி.எஸ்.பி., இளமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
பயிற்சியாளர் பாபு உள்ளிட்ட குழுவினர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். முதல்கட்டமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேட் மின்டன் போட்டிகள் நடந்தது. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து வரும் 520 மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொண் டனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை, பதக்கம் வழங்கப்பட்டது.