/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
ADDED : ஜன 07, 2024 05:15 AM

விழுப்புரம்; விழுப்புரம் நகராட்சி சார்பில் 6 வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி சார்பில், வார்டுகள் வாரியாக மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்து வருகிறது. நேற்று 31, 36, 38, 39, 40, 41 வார்டுகளுக்கான முகாமில், அந்த பகுதி மக்கள் பலர், தங்கள் கோரிக்கை மனுக்களை பதிவு செய்தனர். முகாமை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கமிஷனர் ரமேஷ், கவுன்சிலர்கள் மணவாளன், கோமதி, ஜனனி, புருஷோத்தமன், சாந்தாராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பிறதுறை அலுவலர்கள் பொதுமக்களின் மனுக்களைப் பெற்று ஆன்லைனில் பதிவு செய்தனர்.
விழுப்புரம் நகராட்சி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.