/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாட்டு வண்டி தொழிலாளர்கள் திருவெண்ணெய்நல்லுாரில் மறியல்மாட்டு வண்டி தொழிலாளர்கள் திருவெண்ணெய்நல்லுாரில் மறியல்
மாட்டு வண்டி தொழிலாளர்கள் திருவெண்ணெய்நல்லுாரில் மறியல்
மாட்டு வண்டி தொழிலாளர்கள் திருவெண்ணெய்நல்லுாரில் மறியல்
மாட்டு வண்டி தொழிலாளர்கள் திருவெண்ணெய்நல்லுாரில் மறியல்
ADDED : பிப் 23, 2024 11:50 PM

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையை கண்டித்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பருவத்தின்போது தினமும் 400 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் கரும்பு ஏற்றி வருவது வழக்கம்.
அவ்வாறு வரும் மாட்டு வண்டிகளை ஆலை நிர்வாகத்தனர் நீண்ட நேரம் காத்திருக்க வைத்திருக்கின்றனர். அதனால் தங்களுக்கும், விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது எனக்கூறி நேற்று காலை 9:20 மணியளவில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
அதனையேற்று 9:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.