/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விக்கிரவாண்டியில் பா.ஜ., கொடியேற்று விழாவிக்கிரவாண்டியில் பா.ஜ., கொடியேற்று விழா
விக்கிரவாண்டியில் பா.ஜ., கொடியேற்று விழா
விக்கிரவாண்டியில் பா.ஜ., கொடியேற்று விழா
விக்கிரவாண்டியில் பா.ஜ., கொடியேற்று விழா
ADDED : பிப் 11, 2024 10:06 PM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் பா.ஜ., கொடியேற்று விழா நடந்தது.
விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியம் சின்னத்தச்சூர், புதுப்பாளையம், தென்பேர், நரசிங்கனுார், மேல்நந்திவாடி ஆகிய இடங்களில் நடந்த விழாவிற்கு மண்டல் தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.
கிளைத் தலைவர்கள் பொன்னரசன், ஆனந்தன்ராஜ், கருணாகரன், வனிதா தங்கமணி ஆகியோர் கிராமங்களில் பா.ஜ., கொடியை ஏற்றி வைத்தனர்.
தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார். தொடர்ந்து, பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பா.ஜ., தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சி நடந்தது.
மண்டல பொதுச் செயலாளர்கள் சத்ருக்கன், அய்யனார், பார்வையாளர் மணிவண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கமலேஷ் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.