Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சிறந்த திருநங்கைக்கான விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறந்த திருநங்கைக்கான விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறந்த திருநங்கைக்கான விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறந்த திருநங்கைக்கான விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : ஜன 03, 2024 12:12 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த திருநங்கைக்கான விருதுக்கு தகுதியுடைய திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:

திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2023-24ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெறுவோருக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த விருதை பெற விரும்புவோர், அரசு உதவி பெறாமல் தனது வாழ்வை கட்டமைத்துக் கொண்ட திருநங்கையாக இருக்க வேண்டும். திருநங்கைகள் நலனுக்காக, சிறந்த சேவை புரிந்திருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவு பெறவும், கண்ணியமான வாழ்க்கை நடத்தவும் உதவி செய்திருக்க வேண்டும்.

இந்த விருதுக்கு விண்ணப்பிப்போர் தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது.

இந்த விருது பெற விரும்பும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இறுதி நாளுக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us