/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/போலி நிதி நிறுவன மோசடி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்போலி நிதி நிறுவன மோசடி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
போலி நிதி நிறுவன மோசடி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
போலி நிதி நிறுவன மோசடி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
போலி நிதி நிறுவன மோசடி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஜன 05, 2024 10:16 PM

விழுப்புரம், : விழுப்புரம் அண்ணா அரசு கலை கல்லூரி மற்றும் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை சார்பில், நிதி நிறுவன மோசடி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் குணசேகர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். பொருளாதார குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமா சிறப்புரை யாற்றினார். அவர், கல்லூரி மாணவர்களிடையே, போலி நிதி நிறுவனங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினார்.
இந்திய அரசால் நடத்தப் பெறும் நிதி நிறுவனங்கள் எவை, அரசு அனுமதி பெற்று நடத்தப் பெறும் நிதி நிறுவனங்கள், அரசு அனுமதி பெறாமல் நடத்தப் பெறும் நிதி நிறுவனங்கள் எவை, போலி நிதி நிறுவனங்கள் எவை, அந்நிதி நிறுவனங்கள் வழங்கும் ஆசை வார்த்தைகள், அப்பாவி மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் என்பன போன்ற கருத்துக்களை எடுத்து கூறி, மாணவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தனம் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.