/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஆரோவில் போலீஸ் நிலையம் சார்பில் பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுஆரோவில் போலீஸ் நிலையம் சார்பில் பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
ஆரோவில் போலீஸ் நிலையம் சார்பில் பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
ஆரோவில் போலீஸ் நிலையம் சார்பில் பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
ஆரோவில் போலீஸ் நிலையம் சார்பில் பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
ADDED : ஜன 11, 2024 04:14 AM
வானுார்: ஆரோவில் போலீஸ் நிலையம் சார்பில், பெண் பாதுகாப்பு மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் போதை பொருட்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, பதுக்கி வைத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் படியும், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தவும் , எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, ஆரோவில் போலீஸ் நிலையம் சார்பில், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வானுார் அரசு கல்லுாரி மாணவர்களிடையே பெண் பாதுகாப்பு மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி, பெண் பாதுகாப்பு குறித்தும், போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் போதைபொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கும் படி அறிவுறுத்தினார். இதில், ஆரோவில் போலீசார் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.