ADDED : ஜன 30, 2024 11:24 PM
விழுப்புரம்: குடியரசு தின விழாவையொட்டி, வழக்கறிஞர்கள் சார்பில் விழுப்புரத்தில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜா தலைமை தாங்கி, வெற்றி பெற்ற அணி வீரர்களை வாழ்த்தி, கோப்பையை வழங்கினார்.
சங்கத் தலைவர் காளிதாஸ், அரசு வழக்கறிஞர் வெற்றிவேல், வழக்கறிஞர்கள் ரமேஷ், சஞ்சய்காந்தி, கிங்ஸ் பிரபு, செந்தில், ராஜா, அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் குணதிபன், கோபிநாத், ராஜசேகர், பாலமுருகன் ஆகியோர் செய்தனர்.