ADDED : ஜூன் 15, 2025 01:50 AM

விழுப்புரம்:விழுப்புரம் தனிப்படை போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரித்ததில், மர்ம கும்பலில் சிலரின் மொபைல் போன் நகர்வு வாயிலாக அவர்கள் இருப்பிடத்தை கண்டறிந்து, நேற்று முன்தினம் அதிகாலை பெங்களூரு ரயில் நிலையத்தில் வைத்து நான்கு பேரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த சோனு, 23, சஞ்சய்குமார், 24, சிவா, 27, லவ்குஷ், 25, என, தெரிந்தது. ஜூன் 12ம் தேதி விமானம் வாயிலாக சென்னை வந்த இவர்கள், அங்கிருந்து வாடகை கார் வாயிலாக விழுப்புரம் வந்தனர்.
பின், கிழக்கு பாண்டிரோடு மகாராஜபுரம், மாம்பழப்பட்டு சாலை, எம்.ஜி.,ரோடு பகுதிகளில் உள்ள மூன்று ஏ.டி.எம்., மையங்களில் நுாதன முறையில், 1.65 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து, அன்று இரவு காரில் சென்னை சென்று, அங்கிருந்து ரயிலில் பெங்களூரு சென்றது தெரிந்தது.
அவர்களிடமிருந்து, 10,200 ரூபாய், மொபைல் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை போலீசார் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.