ADDED : மார் 22, 2025 08:59 PM

செஞ்சி : கீழ்பாப்பாம்பாடி அரசு துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் நடந்த விழாவிற்கு, உதவி ஆசிரியர் லட்சுமி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் விஜயராணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் கார்த்திக் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நலன் மற்றும் சமூக பாதுகாப்பு நல வாரிய உறுப்பினர் சிவா சிறப்புரையாற்றி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் ஊராட்சி தலைவர் நாகமுத்து, துணைத் தலைவர் சேகர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார், கிராம கல்வி குழு நிர்வாகிகள் ரேவதி, தீபா, மாஜி கவுன்சிலர் ஸ்டாலின் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. கல்விக் குழு உறுப்பினர் இலக்கியா நன்றி கூறினார்.