/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அ.தி.மு.க., நிர்வாகி மா.செ.,யிடம் ஆசிஅ.தி.மு.க., நிர்வாகி மா.செ.,யிடம் ஆசி
அ.தி.மு.க., நிர்வாகி மா.செ.,யிடம் ஆசி
அ.தி.மு.க., நிர்வாகி மா.செ.,யிடம் ஆசி
அ.தி.மு.க., நிர்வாகி மா.செ.,யிடம் ஆசி
ADDED : ஜன 07, 2024 05:15 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி செயலாளர் முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்
விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு துணைத் தலைவர் சக்திவேல். இவரை, மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சண்முகம் பரிந்துரையின் பேரில், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, மாவட்ட மாணவரணி செயலாளராக மீண்டும் நியமித்துள்ளார்.
இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் சண்முகத்தை சந்தித்து, ஆசி பெற்றார்.
மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் சுரேஷ், நகர செயலாளர் ராமதாஸ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் வேங்கடபதி, துணைத் தலைவர் கோவிந்தராஜ், நகர செயலாளர் தீனதயாளன், நகர இளைஞரணி செயலாளர் பாஸ்கர், மகளிரணி செயலாளர் பத்மபிரியா, மாணவரணி செயலாளர் குகன், வர்த்தக அணி செயலாளர் வீராசாமி உடனிருந்தனர்.