/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பிறந்த நாளில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை பிறந்த நாளில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
பிறந்த நாளில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
பிறந்த நாளில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
பிறந்த நாளில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜூன் 15, 2025 11:54 PM

வானுார்: வானுார் அருகே பிறந்த நாள் அன்று, வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானுார் அடுத்த கரசானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி மகன் அரவிந்த்ராஜ், 23; கிரானைட் தரை போடும் தொழிலாளி. இவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். இரவு வீட்டில் துாங்க சென்ற அரவிந்த்ராஜ், ஓட்டு வீட்டின் முற்றத்தில் உள்ள கம்பியில் துாக்கில் தொங்கினார். சத்தம் கேட்டு, பெற்றோர் கதவை திறந்து பார்த்தபோது துாக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
உடனடியாக இறக்கி பார்த்தபோது, அரவிந்த்ராஜ் இறந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து தவகலறிந்த வானுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அவரது தந்தை கணபதி கொடுத்த புகாரின் பேரில் வானுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, அரவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். பிறந்த நாளில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.