/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பாலத்தின் மீது வேன் மோதி வாலிபர் பலிபாலத்தின் மீது வேன் மோதி வாலிபர் பலி
பாலத்தின் மீது வேன் மோதி வாலிபர் பலி
பாலத்தின் மீது வேன் மோதி வாலிபர் பலி
பாலத்தின் மீது வேன் மோதி வாலிபர் பலி
ADDED : ஜன 28, 2024 07:11 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பாலத்தின் மீது மினி வேன் மோதிய விபத்தில் தம்பி கண் எதிரில் அண்ணன் இறந்தார் .
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அம்மா பாளையத்தை சேர்ந்த மகராஜ் என்பவரது மகன் யஸ்வந்த், 24; இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான தோஸ்த் மினி வேனில் தனது தம்பி நவீன் குமார் ,22 :என்பவருடன் பிராய்லர் கோழிகளை சென்னையில் டெலிவரி செய்துவிட்டு திரும்பி கொண்டிருந்தனர்.
வேனை யஸ்வந்த் ஓட்டினார்.நேற்று முன்தினம் இரவு வேன் விக்கிரவாண்டி வராக நதி அருகே வரும்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த யஸ்வந்தை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
இறந்த யஸ்வந்த்திற்கு மல்லிகா,21; என்ற மனைவியும், தியாஸ்,2; என்ற மகனும் உள்ளார். விபத்து பற்றி விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.