/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/போலீசார் முன் நாட்டு வெடிகுண்டு வீசி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாணவர் கைதுபோலீசார் முன் நாட்டு வெடிகுண்டு வீசி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாணவர் கைது
போலீசார் முன் நாட்டு வெடிகுண்டு வீசி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாணவர் கைது
போலீசார் முன் நாட்டு வெடிகுண்டு வீசி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாணவர் கைது
போலீசார் முன் நாட்டு வெடிகுண்டு வீசி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மாணவர் கைது
ADDED : ஜன 06, 2024 04:59 AM

மரக்காணம : போலீசார் முன் வெடிகுண்டு வீசி, வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் மூசா,19; திண்டிவனத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், கடந்த தீபாவளி அன்று நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அம்பேத்கர் நகர் வழியாக ரோந்து சென்ற போலீஸ் வாகனத்தை நோக்கி வீசி வெடிக்க செய்து, அதனை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமை பார்த்த சிலர் கொடுத்த தகவலின்பேரில், கோட்டக்குப்பம் போலீசார் நேற்று முன்தினம், மாணவர் மூசாவை பிடித்து விசாரித்தனர். அதில், ' ஊரில் பெரிய கெத்தாக தன்னை காட்டிக்கொள்வதற்காக, நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீசியதை ஒப்புக் கொண்டார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மூசாவை கைது செய்து வானுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.