ADDED : ஜன 31, 2024 05:26 AM
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சையதுஅப்பாஸ் மனைவி ஷாதிகா, 46; இவர், தனது தாய் பாப்பாத்தி, தம்பி அப்பாஸ் என்பவரிடம், கடந்த 2011ம் ஆண்டு, 20 பவுன் நகைகளை கடனாக கொடுத்ததாகவும், அதனை திருப்பி தராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நேற்று முன்தினம் காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக வாயிலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் ஷாதிகா மீது வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.