ADDED : பிப் 23, 2024 10:22 PM
விக்கிரவாண்டி : கஞ்சனுார் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயது இளம் பெண். பி.இ., பட்டதாரி. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி காலை சென்னை செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஒரு வழக்கு
அத்தியூர் திருக்கை பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது பெண். திருவண்ணமலையில் தனியார் கல்லுாரியில் முதலாம் படித்து வருகிறார். இவரை கடந்த 20ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.