Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பெருந்திட்ட வளாகத்தில் 5.50 கி.மீ., சிமெண்ட் சாலையாக... மாற்றம் ; ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் முழு வீச்சில் பணிகள் மும்முரம்

பெருந்திட்ட வளாகத்தில் 5.50 கி.மீ., சிமெண்ட் சாலையாக... மாற்றம் ; ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் முழு வீச்சில் பணிகள் மும்முரம்

பெருந்திட்ட வளாகத்தில் 5.50 கி.மீ., சிமெண்ட் சாலையாக... மாற்றம் ; ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் முழு வீச்சில் பணிகள் மும்முரம்

பெருந்திட்ட வளாகத்தில் 5.50 கி.மீ., சிமெண்ட் சாலையாக... மாற்றம் ; ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் முழு வீச்சில் பணிகள் மும்முரம்

ADDED : ஜூலை 18, 2024 05:06 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்,: விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் சேதமடைந்த 5.50 கி.மீ., சாலையை சிமெண்ட் சாலைகளாக சீரமைக்கும் பணி ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி, தாலுகா, ஊரக வளர்ச்சி, எஸ்.பி., மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், நுாலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளது.

இது மட்டுமின்றி, அரசு அதிகாரிகள், ஊழியர்களின் குடியிருப்புகளும் இங்குள்ளன. ஒரே வளாகத்தில் அரசு அலுவலகங்கள் ஒருசேர அமைந்துள்ளதால், இங்கு எந்த நேரமும் தங்களின் தேவைகளுக்காக வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், புதிய பஸ் நிலையம் அருகே பெருந்திட்ட வளாகத்திற்கு வரும் சாலையில் இருந்து மாவட்ட நீச்சல் குளம், இந்து அறநிலைய துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட நுாலகம், சி.இ.ஓ., அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களுக்கு செல்லும் சாலை பல மாதங்களாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது.

இந்த சாலையை சீரமைக்காததால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பலர் குண்டு, குழிகளில் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இது மட்டுமின்றி, மழை காலங்களில் பள்ளங்களில் மழைநீர் சூழ்ந்து நிற்பதால், வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் சிக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர்.

அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களின் பாதிப்பு மட்டுமின்றி, இங்கு பணிபுரியும் ஊழியர்களின் நிலையை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகத்தின் துரித ஏற்பாட்டின் பேரில், பெருந்திட்ட வளாகத்தில் சேதமடைந்துள்ள 5.50 கி.மீ., சாலையை புதிய சிமெண்ட் சாலையாக போடுவதற்கு பொதுப்பணி துறை மூலம் ரூ.5.50 கோடிக்கான டெண்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் விடப்பட்டது.

இந்த பணியை டெண்டர் எடுத்துள்ள தனியார் சாலை போடும் கன்ஸ்டிரக்ஷன் ஊழியர்கள், கடந்த ஒரு மாதத்திற்கு முன், பெருந்திட்ட வளாகத்தில் சேதமடைந்த சாலையில் புதிய சிமெண்ட் சாலை போடும் பணிகளை துவக்கினர்.

புதிய சிமெண்ட் சாலை போடும் பணிகளுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்று மாதங்களில், இந்த சாலையை பயன்படுத்துவோரின் தேவையை கருத்தில் கொண்டு பணிகளை தரத்தோடு முடிப்பதற்கான முயற்சியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us