ADDED : ஜூலை 18, 2024 05:03 AM
செஞ்சி : தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வட்ட கிளை பேரவை கூட்டம் செஞ்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது.
வட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பொருளாளர் அண்ணாதுரை வரவேற்றார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் அறவாழி, செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் துவக்கி வைத்து பேசினர். மாவட்ட தலைவர் பொன்முடி சிறப்புரையாற்றினார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வுதியும் ரூ.7,850 வழங்க கோரியும், 70 வயது முடிந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரியும் தீர்மானம் நிறைவேற்றினர்.
மாவட்ட துணை தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துணை தலைவர் மோகன் நன்றி கூறினார்.