/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஐ.டி., ஊழியரிடம் ரூ.16.92 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணைஐ.டி., ஊழியரிடம் ரூ.16.92 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ஐ.டி., ஊழியரிடம் ரூ.16.92 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ஐ.டி., ஊழியரிடம் ரூ.16.92 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ஐ.டி., ஊழியரிடம் ரூ.16.92 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ADDED : ஜன 11, 2024 03:56 AM
விழுப்புரம்: ஐ.டி., ஊழியரிடம் நுாதன முறையில் ரூ.16.92 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த திருவெண்ணைநல்லுார் அமைச்சாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹேமச்சந்திரன்,34; ஐ.டி., நிறுவன ஊழியர். இவரை நேற்று முன்தினம் மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், மும்பையில் உள்ள பிரபல கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி, கடந்த 2ம் தேதி 5 கிலோ துணிகள், பாஸ்போர்ட் 3, கிரிடிட்கார்டு, லேப் டாப், 250 கிராம் போதை பொருள் மும்பையில் இருந்து கொரியர் மூலம் ஈரானுக்கு சென்றுள்ளது.
இதுகுறித்து விசாரணைக்கு நீங்கள் மும்பைக்கு நேரில் வர வேண்டும் அல்லது ஆன்லைன் வீடியோ காலில் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், விசாரணை நடத்த ரூ.16.92 லட்சம் தொகை, தற்போது உங்கள் வங்கி கணக்கில் கிரடிட் ஆகும், அதனை உடனே எங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றிவிட்டு, விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியுள்ளார்.
அதனை நம்பிய ஹேமச்சந்திரன், சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிற்கு வந்த ரூ.16.92 லட்சத்தை, மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.
சற்று நேரத்தில் ஹேமச்சந்திரனை தொடர்பு கொண்ட தனியார் வங்கி அலுவலர், நீங்கள் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளீர்களா என விசாரித்தார். அதற்கு இல்லை என கூறிய ஹேமச்சந்திரன், சம்மந்தப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று நடந்த சம்பவங்களை கூறினார்.
அப்போதுதான், மொபைல் போனில் பேசிய மர்ம நபர், ஹேமச்சந்திரனை ஏமாற்றி, அவர் பெயரில் ரூ.16.92 லட்சம் ஆன்லைன் வங்கி கடன் பெற்று, மோசடி செய்துள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து, ஹேமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.