/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரூ.161 கோடியில் கழுவேலி ஏரி தூர்வார திட்டம்; வனத்துறையின் அனுமதிக்காக காத்திருப்பு சட்டசபை மதிப்பீட்டுக் குழு தலைவர் தகவல்ரூ.161 கோடியில் கழுவேலி ஏரி தூர்வார திட்டம்; வனத்துறையின் அனுமதிக்காக காத்திருப்பு சட்டசபை மதிப்பீட்டுக் குழு தலைவர் தகவல்
ரூ.161 கோடியில் கழுவேலி ஏரி தூர்வார திட்டம்; வனத்துறையின் அனுமதிக்காக காத்திருப்பு சட்டசபை மதிப்பீட்டுக் குழு தலைவர் தகவல்
ரூ.161 கோடியில் கழுவேலி ஏரி தூர்வார திட்டம்; வனத்துறையின் அனுமதிக்காக காத்திருப்பு சட்டசபை மதிப்பீட்டுக் குழு தலைவர் தகவல்
ரூ.161 கோடியில் கழுவேலி ஏரி தூர்வார திட்டம்; வனத்துறையின் அனுமதிக்காக காத்திருப்பு சட்டசபை மதிப்பீட்டுக் குழு தலைவர் தகவல்
ADDED : ஜன 05, 2024 12:32 AM
விழுப்புரம் : தளவானுார் அணைக்கட்டை மறுசீரமைப்பு செய்ய 56 கோடி ரூபாய் நிர்ணம் செய்துள்ளதாக சட்டசபை பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:
கழுவேலி ஏரியை 161 கோடி ரூபாயிலும், மலட்டாறு வாய்க்காலை 7 கோடியிலும் துார் வார வனத்துறையின் அனுமதி பெற்று நிறைவேற்றப்படும். அழகன்குப்பம் கழுவேலி கீழ்முகத்துவாரத்தில் 150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது. தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கிய பின், இந்த திட்டத்தை செயல்படுத்த குழு பரிந்துரைக்கிறது.
நெடிமொழியனுார் அணைக்கட்டு புதுப்பித்தல் பணிக்காக 30 கோடி ரூபாய். தொண்டியாற்றின் குறுக்கே செண்டூர் அணைக்கட்டு புனரமைத்தல் பணிக்கு 25 கோடி ரூபாய். திருக்கோவிலுார் அணைக்கட்டு புனரமைத்தல் அல்லது மறுகட்டுமான பணிக்காக 52 கோடி ரூபாய் என தோராய மதிப்பீடுகளாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
தளவானுார் அணைக்கட்டை மறுசீரமைப்பு செய்ய 56 கோடி ரூபாய். மலட்டாறு கரைகளை பலப்படுத்த 65 கோடி ரூபாய். முத்தாம்பாளையம் ஏரியை ஆழப்படுத்தி சுற்றுலா தளமாக மாற்ற கருத்துரு 5.20 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நந்தன் கால்வாய் 12 ஆயிரத்து 400 முதல் 37 ஆயிரத்து 880 கி.மீ., வரை ஆண்டு பராமரிப்பு நிதி 20.12 லட்சம் ரூபாய். பனமலைப்பேட்டையின் கீழுள்ள 13 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க உத்தேச மதிப்பீடு 6 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவர் கூறினார்.