/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மூன்று வாகனங்கள் மோதி விபத்து 10 பேர் காயம்: நெடுஞ்சாலையில் டிராபிக்மூன்று வாகனங்கள் மோதி விபத்து 10 பேர் காயம்: நெடுஞ்சாலையில் டிராபிக்
மூன்று வாகனங்கள் மோதி விபத்து 10 பேர் காயம்: நெடுஞ்சாலையில் டிராபிக்
மூன்று வாகனங்கள் மோதி விபத்து 10 பேர் காயம்: நெடுஞ்சாலையில் டிராபிக்
மூன்று வாகனங்கள் மோதி விபத்து 10 பேர் காயம்: நெடுஞ்சாலையில் டிராபிக்
ADDED : பிப் 11, 2024 02:57 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரி நேற்று அதிகாலை 5:00 மணிக்கு விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் பம்பை ஆற்றுபாலம் அருகே பழுதாகி நின்றது.
அப்போது, அதே மார்க்கத்தில் வந்த அரசு விரைவு பஸ், எதிர்பாராத விதமாக சாலையோரம் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரியின் பின்னால் மோதியது. இதனால், அதற்கு பின்னால் வந்த தனியார் சுற்றுலா பஸ், அரசு விரைவு பஸ்சின் பின்னால் மோதியது.
இந்த விபத்தில் அரசு விரைவு பஸ்சில் பயணித்த காரைக்குடி அனுசுயா, 55; குணசேகரன், 58; திருச்சி பொறையூர் மாசி, 42; முசிறி சதீஷ், 37; உட்பட 10 பேர் காயமடைந்தனர். தனியார் சுற்றுலா பஸ்சில் வந்தவர்கள் காயமின்றி தப்பினர்.
விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காலை 5:30 மணி வரை போக்குவரத்து பாதித்தது.