/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மயிலத்தில் விளையாட்டு மைதானம் இளைஞர்கள் கோரிக்கை மயிலத்தில் விளையாட்டு மைதானம் இளைஞர்கள் கோரிக்கை
மயிலத்தில் விளையாட்டு மைதானம் இளைஞர்கள் கோரிக்கை
மயிலத்தில் விளையாட்டு மைதானம் இளைஞர்கள் கோரிக்கை
மயிலத்தில் விளையாட்டு மைதானம் இளைஞர்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 11, 2024 05:35 AM

மயிலம் : மயிலம் ஊராட்சியில் புதியதாக விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் சட்டசபை தொகுதியாக உள்ளது. இந்த பகுதியில் நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் ஓய்வு நேரங்களிலும் மாலை நேரத்திலும் விளையாடுவதற்கும், நடை பயிற்சிக்காகவும் மயிலத்தின் முக்கிய பகுதியில் மைதானம் இல்லை.
இங்குள்ள பெரும்பாலான இளைஞர்கள் கிரிக்கெட், கபடி, வாலிபால், கால் பந்து, பூப்பந்து, உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் மிக ஆர்வமாக உள்ளனர். இது போன்று பள்ளி குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டுக்கான உள் கட்டமைப்பு வசதிகளுடன் விளையாட்டு சாதனங்களை வழங்கவேண்டும். விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் பயிற்சி செய்வதற்கு தகுந்த விளையாட்டு மைதானம் மயிலம் பகுதியில் இல்லை. எனவே அரசு சார்பில் மயிலம் பகுதியில் புதியதாக விளையாட்டு மைதானம் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட வேண்டுமென இளைஞர்கள் பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே மயிலம் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இது குறித்து மயிலத்தைச் சேர்ந்த கிஷோர் குமார் கூறுகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் மிக முக்கியமான ஆன்மிக சுற்றுலா ஸ்தலமாக உள்ளது. மேலும் இந்த ஊரில் ஏராளமான இளைஞர்கள் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படித்து வருகின்றனர்.
இவர்களின் முக்கிய பொழுதுபோக்கு விளையாட்டாகும். இவர்கள் தற்காலிகமாக வீட்டு மனை பிரிவு வளாகத்திலும், வயல்வெளிகளிலும் மைதானங்களாக பயன்படுத்தி கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே இளைஞர்கள் பயன் பெறுகின்ற வகையில் மயிலத்தில் அனைத்து கட்டமைப்புகளும் கூடிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடக்கூடிய ஒரு விளையாட்டு மைதானத்தை அரசு அமைத்துத்தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.