/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரயில்வே தளவாட பொருள் திருடிய வாலிபர் கைது ரயில்வே தளவாட பொருள் திருடிய வாலிபர் கைது
ரயில்வே தளவாட பொருள் திருடிய வாலிபர் கைது
ரயில்வே தளவாட பொருள் திருடிய வாலிபர் கைது
ரயில்வே தளவாட பொருள் திருடிய வாலிபர் கைது
ADDED : ஜூன் 09, 2024 04:54 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில் ரயில்வே தளவாட பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் அருகே கிடங்கல் 2 பகுதியை சேர்ந்தவர் சாம், 20; இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், மதுபோதையில் திண்டிவனத்தில் ரயில் பயணிகளிடம் மொபைல் போனை பறித்ததோடு, ரயில்வே இரும்பு தளவாட பொருட்களை திருடியுள்ளார்.
திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப் பதிந்து சாமை கைது செய்தனர்.