/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காசி விஸ்வநாதர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா காசி விஸ்வநாதர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
காசி விஸ்வநாதர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
காசி விஸ்வநாதர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
காசி விஸ்வநாதர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா
ADDED : ஜூன் 09, 2024 04:54 AM

செஞ்சி: செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
செஞ்சி, சிறுகடம்பூரில் உள்ள விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் புதிதாக சிவன், பார்வதி ஐம்பொன் உற்சவர் சிலைகள் செய்திருந்தனர். இந்த சிலைகளுக்கு கும்பாபிஷேகம் செய்து 48 நாள் மண்டல பூஜை செய்து வந்தனர். இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.
அதனையொட்டி, மூலவர் விசாலாட்சி, விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. உற்சவர் சிவன், பார்வதிக்கு கலச பிரதிஷ்டை செய்து சிறப்பு வேள்வி நடத்தப்பட்டது.
பின், கலசநீர் கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.