/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நகராட்சி பெண் ஊழியரிடம் செயின் பறித்த வாலிபர் கைது நகராட்சி பெண் ஊழியரிடம் செயின் பறித்த வாலிபர் கைது
நகராட்சி பெண் ஊழியரிடம் செயின் பறித்த வாலிபர் கைது
நகராட்சி பெண் ஊழியரிடம் செயின் பறித்த வாலிபர் கைது
நகராட்சி பெண் ஊழியரிடம் செயின் பறித்த வாலிபர் கைது
ADDED : ஜூன் 16, 2024 11:39 PM
திண்டிவனம் : திண்டிவனத்தில் நகராட்சி பெண் ஊழியரிடம் செயின் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் நகர பகுதியில் அடிக்கடி பைக்குகளில் வருபவர்களை வழிமறித்து, செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. சமீபத்தில் நாகலாபுரம் பாலம் அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இந்நிலையில் விழுப்புரம் காலேஜ் ரோட்டைச் சேர்ந்த கங்கைஅமரன் மனைவி அங்காளம்மன், 40; திண்டிவனம் நகராட்சி ஊழியர். இவர், நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில், திண்டிவனம் ஜெயபுரம் அங்கன்வாடி குழந்தைகள் மையம் எதிரே உள்ள கடைக்குச் சென்றார்.
அப்போது அங்கே ஸ்கூட்டரில் பின் தொடர்ந்த வாலிபர், அங்காளம்மன் கழுத்தில் இருந்த ஒரு சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினார்.
அங்காளம்மன் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட எண்டியூர், முருகா நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திக், 35; என்பவரை நேற்று கைது செய்து, அவரிடமிருந்து நகை மற்றும் ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.