ADDED : ஜூன் 16, 2024 11:39 PM
மரக்காணம் : மரக்காணம் பகுதியில் சாராயம் கடத்தி, விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மரக்காணம் அடுத்த பிரம்மதேசம் போலீசார் நல்லாளம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற சிவப்பிரகாசம் மனைவி சசிகலா, 32; ஆலங்குப்பம், திரவுபதி அம்மன் கோவில் தெருவில் சாராயம் விற்ற கண்ணதாசன், 42; ஆகிய இருவரையும் கைது செய்து, தலா 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மரக்காணம் இ.சி.ஆர்., சாலை, சாணக்யா பள்ளி எதிரில் மரக்காணம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து மரக்காணம் நோக்கி மொபட்டில் வந்த பெண்ணை நிறுத்தி சோதனை செய்ததில் 150 பாக்கெட் புதுச்சேரி சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் கந்தாடு, புது தெருவைச் சேர்ந்த சிவா மனைவி சித்ரா, 43; என்பதும் இவர் புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்த விற்பனை செய்வதாக கூறினார். உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.